மிக எளிதில் செய்யக் கூடிய
நக்ஷத்திர பரிகாரங்கள்
நாராயணன்
சப்தரிஷி அருள் வாசகர்களுக்கு:
ஒவ்வொரு நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கும்
நிறையும் உண்டு, குறையும் உண்டு. குறைகளை நிவர்த்தி செய்யும் பரிகார முறைகள் நமது
மஹரிஷிகளால் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் எளிதான சிலவற்றை உங்களுக்கு
தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவை முதலில் சிலருக்கு பரிசோதனை முயற்சியாக
அளிக்கப்பட்டன. அவை பலன் தரும் நிலை ஆச்சர்யகரமானது. சில ஜோதிட விர்ப்பண்ணர்களின்
அனுபவ முறைகள் சொல்லப்பட்டுள்ளன. முதலில் படிக்கும்போது மூட நம்பிக்கையாகத் தோன்றலாம்.
ஆயினும் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது
அறிவு” என்கிற வள்ளுவரின் வாக்குப் படி முயற்சி செய்து பாருங்கள். நீங்கள்
வியப்படைவீர்கள் என்பதில் ஐயமில்லை.
பொதுவான பரிகாரங்கள்
·
எப்பொழுதும் உங்கள் நக்ஷத்திரத்தின் படத்தையும் அதன்
தேவதையின் படத்தையும் உங்கள் அருகில் (PURSE, HANDBAG) வைத்திருங்கள். உங்களது
செயல்பாடுகள் எப்பொழுதும் அந்த நக்ஷத்திரத்தின் குணங்களை ஒட்டி இருக்கும்.
·
உங்களது பிறந்த நக்ஷத்திரத்திலிருந்து 16 ஆவது
நக்ஷத்திரத்திற்கு பரிகாரம் செய்யுங்கள்.
·
உங்களது ஜாதகத்தில் பரணி நக்ஷத்திரத்தில் ஏதேனும்
கிரகம் இருந்தால் நீங்கள் செய்யும் செயல்களுக்கு உண்டான பலன் குறைவாகவே
கிடைக்கும். அதனால் அப்படி உள்ள ஜாதகர்கள் வாழ்க்கை முழுவதும் பரணி நக்ஷத்திர
பரிகாரம் செய்திடல் வேண்டும்.
·
நீங்கள் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்போது அல்லது
நீண்ட நேரம் வீட்டை விட்டு வெளியில் இருக்கும் நிலை வந்தால் உங்கள் வாசல் கதவின்
வெளிப்புறம் இடது புறம் ஒரு ஊதுபத்தியை (சந்தன மணம் கமழும்) ஏற்றி வைத்துவிட்டு
கேதுவை வணங்கி கேதுவின் தேவதையான பிள்ளையாரை வணங்கிச் செல்லுங்கள். (கேது உங்கள்
ஜாதகத்தில் பிரச்சினை தரும் நிலையில் இருப்பின் மட்டுமே இது அவசியம்)
·
உங்கள் ஜாதகத்தில் ராகு தவறான இடத்தில் இருந்தாலும்
அல்லது தவறான இடத்துக்கு ராகு கோசாரத்தில் இடம் பெயர்ந்தாலும், உங்கள் வீட்டு
வாசல் படியின் கதவின் வலப் புறத்தில் சந்தன மணம் கமழும் ஊதுபத்தியை ஏற்றி
வையுங்கள்.
·
கேதுவால் வரும் தொல்லைகளுக்கு காளி அன்னைக்கு 11
எலுமிச்சம்பழம் கொண்டு கட்டிய மாலையை அணிவியுங்கள்.
நக்ஷத்திர பரிகாரங்கள்
அஸ்வினி
·
செவ்வாய் + கேதுவின் தொடர்பு
·
மருத்துவ பரிசோதனைக்கு மிகவும் உகந்த நக்ஷத்திரம்
·
துன்பப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி செய்யுங்கள்.
·
நாய்க்கு உணவளியுங்கள்
·
வெள்ளை எள்ளில் செய்த பக்ஷணத்தை குழந்தைகளுக்கு தானம்
செய்யுங்கள்.
·
வியாழக்கிழமைகளில் லக்ஷ்மிநாராயணர் கோவிலிலும்,
மாஹான்கள் சன்னிதியிலும் (ராகவேந்திரர், சாய்பாபா, காஞ்சி பரமாசார்யா) ஏலக்கி
வாழைப்பழங்கள் வைத்து பிரார்த்தனை செய்து அவற்றை தானம் செய்யுங்கள். குறைந்தது
நான்கு வாழைப் பழங்கள் வைக்க வேண்டும்.
·
இரட்டைக் குதிரையின் பின்னால் சூரியன் அமர்ந்தது போன்ற
படம் உங்களிடம் எப்பொழுதும் வைத்திருங்கள்.
பரணி
·
பொதுவாக பரணி நக்ஷத்திரத்தில் ஒரு கிரகம் இருந்தாலும்,
அந்த நக்ஷத்திரத்தில் ஒரு கிரகம் கோசாரத்தில் பயணம் செய்தாலும் அந்த கால
கட்டத்தில் மீன லக்னத்தவர்க்கு பொருளாதார ரீதியாக நஷ்டம் ஏற்படும். பரணியில்
கிரகங்கள் ஏதுமில்லாத ஜாதகருக்கு பாதிப்பு இருக்காது. ஆயினும் மேஷம் எந்த பாவமாக
அமைகிறதோ அந்த பாவத்தில் எல்லோருக்கும், பரணியில் சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள்
கோசாரத்தில் பயணம் செய்யும் கால கட்டத்தில் அவர்களது செயல்பாட்டினால் கிடைக்க
வேண்டிய லாபம் அல்லது பலன் குறைவாகவே கிடைக்கும்.
·
பரணி நக்ஷத்திரத்தன்று யாருக்கும் பணம் கடனாகக்
கொடுக்காதீர்கள். பயணம் செய்வதும் தவிர்ப்பது நல்லது. பணம் திரும்பி வராது. பயணம்
வேற்றி பெறாது.
·
உங்கள் வீட்டில் சுபீக்ஷம் நிலைக்க வேண்டும் என்றால்
பரணி நக்ஷத்திர தினங்களில் வீட்டில் கட்டாயம் சர்க்கரையும், கல் உப்பும்
வைத்திருக்க வேண்டும்.
·
மூன்றங்குலத்துக்கு மூன்றங்குலம் ஒரு துணியை
எடுத்துக்கொண்டு அதில் படத்தில் உள்ளதுபோன்று மூன்று புள்ளிகளை சிவப்பு நிறத்தில்
வைத்து அதை படமாக வீட்டில் தொங்க விடுங்கள். வீட்டில் சுபீக்ஷம் நிலவும்.
0 |
·
பரணியில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் சிறிது
பாலும், சிறிது தயிரும் தன் தலையில் சேர்த்துக் குளிக்க வேண்டும். இது அவரது
பொருளாதாரத்தையும் உறவு நிலைகளையும் காக்கும்.
·
பரணி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், பரணி +
வெள்ளிக்கிழமை + திரயோதசி சேரும் நாட்களில் உடலுறவு கொண்டால் குழந்தை தடையின்றி
பிறக்கும்.
கார்த்திகை
·
சூரியன் + செவ்வாய் மற்றும் சூரியன் + சுக்கிரன்
தொடர்பு
·
கார்த்திகை நக்ஷத்திரமும் ஞாயிரும் கூடிய தினத்தில்
கணபதி ஹோமம் மற்றும் நவக்ரஹ ஹோமம் செய்யுங்கள். பின்னர் சமையல் பாத்திரங்கள்,
கத்தி ஆகியவற்றை ஹோமம் செய்த ஆசார்யனுக்கு தானம் செய்யுங்கள்.
·
உங்களுடன் எப்பொழுதும் ஒரு கத்தி வைத்திருங்கள்.
ரோஹிணி
·
சந்திரன் + சுக்கிரன் கூட்டு.
·
இளம் பெண்களுக்கு நல்ல வாசனை திரவியங்கள்,
பொட்டுக்கள், கை விரல்களில் போடும் நக பாலிஷ், பிந்தி போன்ற பொருட்களை பரிசாக
அளியுங்கள்.
·
திருமணமானவரென்றால் ரோஹிணி நக்ஷத்திரத்தன்று உங்கள்
களத்திரத்துடன் நேரத்தை செலவிடுங்கள்.
·
மகாலக்ஷ்மிக்கு (கடவுள்) முத்துமாலை ஆபரணம் அணிந்து
அழகு பாருங்கள்.
மிருகசீரிஷம்
·
செவ்வாய் + சுக்கிரன், செவ்வாய் + புதன் கூட்டு
·
செவ்வாய் + சுக்கிரன் கூட்டு நக்ஷத்திர பாதத்தில்
பிறந்தால் ஒரு இள வயதுள்ள வேதம் பயிலும் பிரும்மச்சாரி பிராமணனுக்கு நெய்யும்,
வேஷ்டியும் மிருக சீரிஷ நக்ஷத்திரத்தன்று தானம் செய்யுங்கள்.
·
செவ்வாய் + புதன் கூட்டு நக்ஷத்திர பாதத்தில்
பிறந்திருந்தால், சிவப்பு வர்ணத்தில் உள்ள பென்சில் அல்லது பேனா ஒரு குழந்தைக்கு
செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில்
கொடுங்கள். (வெளியில் சிவப்பு நிறம். மையின் நிறம் கருப்பாக இருக்கட்டும்). இப்படி
16 செவ்வாய் மற்றும் புதன் கிழமைகள் கொடுங்கள்.
·
புதன் கிழமைகளில் புறாவுக்கு பச்சை தானியங்கள்
அளியுங்கள். சிலருக்கு தோலில் பிரச்சனை இருந்தாலும், முடி கொட்டுவது போன்ற
பிரச்சனைகள் இருந்தாலும் சரியாகும். புதன் கிழமை + மிருகசீரிஷம் சேர்ந்த அன்று இதை
செய்தால் நல்ல பலன் தரும்.
திருவாதிரை
·
புதன் + ராகு கூட்டு
·
நாய்களுக்கு உணவளியுங்கள்
·
பிராணிகளை பாதுகாக்க உதவுங்கள்.
·
மாமிச உணவு உண்பவராக இருப்பின், திருவாதிரை
நக்ஷத்திரத்தன்று மாமிச உணவு உட்கொள்ளாதீர்கள்.
·
பச்சை பயறு தானியத்தை அல்லது பச்சை பயிறினால் செய்த
உணவை பைரவருக்கு நைவேத்யம் செய்யுங்கள். அது புதன் + தேய்பிறை அஷ்டமியாக இருப்பின்
மிகவும் விசேஷம்.
புனர்பூசம்
·
குரு + புதன் கூட்டு
·
பச்சை புடவையையும், பச்சை பயிறு தானியத்தையும்
புனர்பூச நக்ஷத்திரத்தன்று வேதம் படித்த முதியவருக்கு தக்ஷிணையுடன் தானம்
செய்யுங்கள்.
·
உபன்யாசம் நடக்கும் இடங்களுக்கு சென்று உபன்யாசத்தை
செவி மடுங்கள். உபன்யாசம் ஏற்பாடு செய்து பலரும் கேட்க உதவுங்கள்.
·
புனர்பூசம் 4 ஆம் பாதத்தில் பிறந்தவர் என்றால் பெண்
பூனைக்கு பால் அளியுங்கள்.
பூசம்
·
சனி + சந்திரன் கூட்டு
·
இதன் அடையாளம் பூ. அதனால் ஒரு பூச்செடியை நட்டு,
அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்து, அந்த புஷ்பங்களை மஹவிஷ்ணுவுக்கு
அளியுங்கள். திங்கள் கிழமை அல்லது சனிக்கிழமை மிகவும் விசேஷம்.
·
ஒரு கழுதைக்கு உணவளியுங்கள். கடின உழைப்புக்கு
உதாரணமான மிருகம் அது.
ஆயில்யம்
·
புதன் + சந்திரன் கூட்டு
·
சிவனுக்கு புதன் மற்றும் திங்கள் கிழமைகளில்
பாலபிஷேகம் செய்யுங்கள்.
·
ராமேஸ்வரம், திருச்செந்துர் மற்றும் வேதாரணியம் சென்று
அங்கு கடலுக்கு பால் அளியுங்கள். ஆயில்யம் முதல் பாதம் என்றால் ராமேஸ்வரம்,
இரண்டாம் பாதம் என்றால் திருச்செந்தூர், மூன்றாம் பாதம் என்றால் வேதாரணியம்,
நான்காம் பாதம் என்றால் ராமேஸ்வரம்.
·
ஒரு ஆண் பூனைக்கு பால் அளியுங்கள்.
மற்ற நக்ஷத்திரங்கள் அடுத்து
வரும் இதழ்களில்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
I thought I would leave my first comment. I don’t know what to say except that I have enjoyed reading. Nice blog, I will keep visiting this blog very often vedic astrologer in bangalore | Top astrologer in bangalore
ReplyDeleteIt is astonishing and magnificent to visit your site. It truly gives me a knowledge on this theme Best Astrologer Service in London | Genuine Astrologer in London
ReplyDeleteWow, amazing and getting to know about the remedies within your post sharing details for the birth stars. Thank you so much. Kalpana Srikaanth astrologer | Kalpana Sreekanth
ReplyDeletePandit Vivek Ji is the Astrologer in Melbourne, Australia. He has become a world-renowned figure by offering the best solution and services to heal every sort of human issue. Everyone facing problems in Personal and Professional life, but they might be thinking that it is very difficult to get out a solution for those problems. Our Indian Astrologer Vivek Ji has years of experience in astrology services in Melbourne. He will give 100% Results for your life problems and you will get rid of all your life problems.
ReplyDeleteAstrologer in Melbourne
Very good article,Thank you
ReplyDeleteFor sofa repair service contact thesofastore they gives
Sofa Refurbishing in Agara Bangalore
Good post,Thank you.
ReplyDeletevisit our website
Vashikaran Astrologer in Udupi
Nice post. Keep sharing. Thanks for sharing.
ReplyDeleteThe best astrological services contact. Best Astrologer In Kammanahalli
Thanks for providing this information. It's very helpful.
ReplyDeleteVisit Best Astrologer in Jangaon
Nice article..
ReplyDeleteClick here to get a best astrological services contact. Best Astrologer in Hubli