நான் ஏன் பயப்படுகிறேன்?
வருகின்ற மார்ச் மாதம் 9 ஆம் நாள் ஒரு முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், பசிபிக் பெருங்கடல் பகுதியிலும் தெரியும். இந்தியாவில் இது பூரணமாக இருக்காது, பகுதியாக இருக்கும். பூரட்டாதி நக்ஷத்திரத்தில் கேது க்ரஸ்தமாக தோன்றும். காலை 05:09 லிருந்து 06:47 வரை இருக்கும்.
பொதுவாக பூரட்டாதி நக்ஷத்திரத்தில் ஏற்படும் சூரிய கிரஹணம் பூமி அதிர்வுகளை ஏற்படுத்தும். கூர்ம சக்கரத்தில் பூரட்டாதி நக்ஷத்திரம் வடக்கு திசையைக் குறிப்பதாலும், இந்த கிரஹணம் ஏற்படும் ராசி கும்பம் மேற்கு திசையைக் குறிப்பதாலும் இது இந்தியாவின் வட மேற்கு திசையில் உள்ள இமயமலைப் பகுதிகளைத் தாக்கும். வடக்கில் உள்ள உத்தராகண்ட், உத்தரபிரதேசம், தில்லி, ஹரியானா, ஹிமாசல் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இதன் தாக்கம் இருக்கும். இந்தியாவுக்கு வட மேற்கில் இருக்கும் பாகிஸ்தானிலும், இந்தியாவின் மேற்கு மாநிலங்களான குஜராத், ராஜஸ்தானிலும் இதன் தாக்கம் இருக்கும்.
சூரிய கிரகணம் ஏற்பட்ட 15 நாட்களில் இந்த பூகம்பம் ஏற்படலாம். சூரிய கிரகணம் ஏற்படும் நாளில் உள்ள கிரக நிலைகளைப் பாருங்கள்.
சந், சூரி
|
கேது
| ||||||
லக், சுக், சூரி, புத, சந், கேது
|
ராசி
|
லக்னம்
|
நவாம்சம்
| ||||
ராகு, (குரு)
|
சனி, புத
| ||||||
சனி, செவ்
|
ராகு
|
(குரு)
|
சுக்
|
செவ்
|
பவிஷ்யபல பாஸ்கரா என்னும் மிகவும் பழமையான பொது உலக ஜோதிட நூலில் சொல்லப்பட்ட விபரம்:--
ஒரு கிரகணத்தின்போது சூரியனும் சந்திரனும் தீயவர்களுடன் சேர்ந்து தீயவர்களால் பார்க்கப்பட்டால் அரசர்களையும் அவர்களது நாடுகளையும் அழிக்கும்.
லக்ன கேந்திரங்களான லக்னம், 7 ஆம் வீடு, 10 ஆம் வீடு ஆகியவற்றில் அனைத்திலும் தீயவர்கள் குடிகொண்டிருக்கின்றார்கள். 10 ஆம் வீட்டிலிருந்து செவ்வாய், லக்னம், சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன் கேது ஆகியவற்றைப் பார்க்கிறார். 7 ஆம் வீட்டிலிருந்து ராகுவும் பார்க்கிறார். ராகுவுடன் சேர்ந்து பலமிழந்த குருவின் பார்வை இங்கு பலனளிக்க முடியாத நிலையில் உள்ளது. 10 ஆம் வீட்டில் இருக்கும் சனி ராகுவையும் குருவையும் பார்க்கிறார்.
சூரியனுக்கு செவ்வாயின் கேந்திர பார்வை ஒரு யுத்தத்தைக் கொண்டுவரும். இந்த யுத்தம் மேற்கு நாடுகளில் ஒன்றில் நடக்கும். அது இந்தியாவின் மேற்கிலும் நடக்கலாம். ஏனெனில் இந்த நிலை மேற்கு திசையைக் குறிக்கும் கும்பத்தில் ஏற்படுகிறது.
அந்த நேரத்தில் சனி கேட்டை நக்ஷத்திரத்தில் பவனி வருகிறார். சில பழைய நூல்கள் சனி கேட்டையில் கோசாரத்தில் பவனி வரும் காலை மேற்கு திசையில் ஒரு யுத்தம் வரும் என்கின்றன.
ஜோதிடரீதியாக இந்தியாவின் மேற்கு பகுதியில் யுத்தம் வரும் வாய்ப்பு அதிக அளவில் தென்படுகின்றது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்திய பாகிஸ்தான் உறவுகள் சீர்குலைந்து யுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம் ஜோதிடரீதியாகத் தென்படுகின்றன. அதுபோல மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் (இந்தியாவின் மேற்கு பகுதி) யுத்தத்துக்கான சாத்தியக் கூறுகள் நிறைய இருக்கின்றன. கூர்ம சக்கரம் இதைத்தான் சொல்லுகிறது.
ஏப்ரல் மாதம் 18 ஆம் தேத்திக்குப் பின்னர் சுமார் 20 நாட்கள் சனி, செவ்வாய், குரு ஆகிய மூவரும் வக்கிர கதியில் பயணம் செய்கிறார்கள். அப்பொழுது சைனாவின் வடக்கு, ஹிந்துகுஷ் மலைப்பகுதிகள், ஆஃப்கனிஸ்தான், பாகிஸ்தான் போன்ற பகுதிகளில் இன்னொரு பூகம்பம் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன.
ஆக இந்த கிரகணம் யுத்தம் மற்றும் இயற்கை பேரழிவு ஆகியவற்றுக்கு ஆரம்பமாக இருக்கும் சாத்தியக் கூறுகள் நிறைய ஜோதிடரீதியாகத் தென்படுகின்றன என்பதில் ஐயமில்லை.
இன்னுமொரு சூரிய கிரகணம் செப்டம்பர் 1, 2016 அன்று ராகு க்ரஸ்தமாக ஏற்படுகின்றது. அந்த கால கட்டத்திலும் சிம்மத்தில் சூரியன், சந்திரன், ராகு அமர்கிறார்கள். அதன் கேந்திரமான விருச்சிகத்தில் சனியும், செவ்வாயும் அமர்கிறார்கள். கேது கும்பத்தில் அமர்கிறார். இந்த நிலையும் உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.
பிருஹத் சமிதையில் சொல்லப்பட்ட நிலை:--
· சூரியன் அல்லது சந்திரனின் உதய நேரம் அல்லது அஸ்தமன நேரத்தில் ஒரு கிரகணம் ஏற்படின் அது பயிர்களை நாசம் செய்யும்;அரசர்களுக்கு தொல்லை தரும்.
· கிரகணப் புள்ளி கும்பத்தில் அமைகிறது. அது கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வேலை செய்யும். ஏனெனில் செவ்வாய் அந்த ஆறு மாதங்கள் விருச்சிகத்திலிருந்து கும்பத்தை பார்க்கிறார்.
· செவ்வாய் சூரியனையும் சந்திரனையும் கிரகணத்தின்போது பார்ப்பது நெருப்பினால் ஆபத்து, யுத்தம் மற்றும் திருடர்களால் ஆபத்து போன்றவற்றைக் கொண்டு வரும்.
· இந்த சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து 23 ஆம் தேதி ஒரு சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. அது இந்தியாவில் தெரியாது. இப்படி ஒரே மாதத்தில் இரு கிரகணங்கள் ஏற்படுவது அழிவைத்தரும்.
· குரு வக்ரகதியில் பயணிக்கும்போது சனியும் ராகுவும் அதை பாதிக்கும்போது இக்கிரகணத்தின் தாக்கம் அதிகமாகிறது. தேவகுரு பிருஹஸ்பதியின் ஆசீர்வாதம் கிடைக்காமல் போய்விடுகிறது.
· தன காரகன் குரு பலமிழப்பதால் ஷேர்மார்க்கெட்டில் வீழ்ச்சி ஏற்படலாம். பொருளாதார சிக்கல்கள் ஏற்படலாம்.
· எல்லா கிரகங்களும் கேந்திரத்தில் அமைவது தீய பலன்களுக்கு வலு சேர்க்கிறது.
· நவாம்சத்தில் செவ்வாயும், சனியும் பூமி தத்துவத்தால் ஆளப்படும் ராசிகளில் அமர்ந்திருப்பது பூகம்பத்துக்கு வழிவிடும் என்று ஜோதிட மேதை பி. வி. ராமன் அவர்கள் தன்னுடைய நூல் ஒன்றில் சொல்லியுள்ளார்.
நாம் செய்ய வேண்டியது என்ன?
· உலக அமைதிக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
· துர்கைக்கு ஹோமம், விஷ்ணுவுக்கு திருமஞ்சனம், சிவனுக்கு ருத்ராபிஷேகம் போன்றவற்றை நிகழ்த்தி உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
· ஓம் நமோ பகவதே சூகராய நமஹ என்னும் மந்திரத்தை 108 என்கிற அலவில் நிறைய நாட்கள் ஜபிக்க வேண்டும்.