Wednesday, August 3, 2016

New Batch of Astrology Classes

New Batch of Astrology classes will be started on August 28th 2016.

All those who are interested in learning Astrology in traditional way are requested to contact Sri S Narayanan at 9381713052, Shekaran at 9841431273, 9840589409 and Shyamala at 9840136403 and Nagarajan at 9841948752 and register your name.

Location: Karnataka Sanga School, Habibullah Road Chennai 17

Transit of Jupiter from Leo to Virgo

Jupiter is transiting on August 2nd 2016 as per Vakkiyam and on 11th August 2016 as per Thirukkanitham from Leo to Virgo. Jupiter is one planet which gives beneficial results when transiting through 2nd, 5th, 7th, 9th and 11th houses from where Moon is posited in natal chart. It generally gives unfavorable results while transiting in 1st, 3rd, 4th, 6th, 8th, 10th and 12th hoses from Moon in natal chart.

Since it is moving to Virgo, it becomes the 1st house. Libra is the 12th house. Scorpio is the 11th house. Sagittarius is the 10th  house. Capricorn is 9th house. Aquarius is 8th. Pieces is 7th. Aries is 6th, Taurus is 5th. Gemini is 4th. Cancer is 3rd. Leo is 2nd. What is said is the position of Jupiter from natal Moon houses.

Results:--

1. FOR ALL PERSONS WHOSE NATAL MOON IS IN VIRGO (UTHIRAM 2,3,4, HASTHAM 1-4, CHITRA 1,2)

Jupiter in 1st house is not favorable. It will bring lot of hurdles and tensions in all aspects of life.  There will be delays in all the activities. There will be lack of happiness and satisfactions. However, this period may be good for religious or spiritual purposes.

2. For all persons whose natal Moon is in leo (makam 1-4, pooram 1-4, uthiram 1)

Jupiter in 2nd house Gochara is  very favorable. You will be bestowed with wealth, good income, and happiness. There can also be a birth in the family.  You relations with the family members will be good.  If  there is a planet in the 12 th house from moon, the Jupiter will be in Vedha. That means, the positive effects of Jupiter will reduce.

3. FOR ALL PERSONS WHOSE NATAL MOON IS IN CANCER (PUNARPOOSAM 4, POOSAM 1-4, AYILYAM 1-4)

Jupiter is not favorable in the 3rd house in Gochara. There will be lot of hurdles in your life. Financially this may not be a good phase. There will be obstacles in business. You are also likely to lose some money. You may have trouble with your employer.  However, some of you may do some religious deeds, because Jupiter will aspect the 9th house. 

4. FOR ALL PERSONS WHOSE NATAL MOON IS IN GEMINI (MIRUGASEERISHAM 3,4, THIRUVATHIRAI 1-4, PUNARPOOSAM 1TO3) 

Jupiter is not favourable in 4th house in Gochara. This brings along worries for you. Stay away from any kind of litigations and property related issues. Try and maintain cordial relationships with your relatives and friends. Financially this could be a trying time for you. Take measures to avoid unnecessary expenses and travel. Be careful when driving vehicles.

5. For all persons whose natal moon is in taurus (karthikai 2 to 4, rohini 1-4, mirukaseerisham 1,2)

Jupiter is highly favorable in 5th house in Gochara. Financially, this will prove to be a good time.  It is also good time for any speculations like stocks.  An auspicious event may take place at home, like birth of child . You may successfully complete all your plans and wishes.  If you are single, you may get perfect match.  It is also good time for students to o well in their studies. 

6. for all persons whose natal moon is in aries (aswini 1-4, barani 1-4, karthikai 1)

Jupiter is not favorable in 6th house in Gochara. You need pay more attention to your health. There may be lot of expenditure and debts. You may not have cordial relations? with your coworkers. You may feel unhappy and restless.  You need to be careful with the thiefs or any theft.

7. for all persons whose natal moon is in pieces (poorattathi 4, uthirattaathi 1-4, revathi 1-4)

Jupiter is highly favorable in 7th house in Gochara. You will have lot of happiness and relations with the spouse will also be good. If you are single, you may get married during this period. You will enjoy good health. You will have good relations with your coworkers. Socially, this a very good time. You will enjoy the company of friends and relatives.

8. for all persons whose natal moon is in aquarius (avittam 3, 4, sathayam 1-4, poorattathi 1,2,3)

Jupiter is not favorable in 8th house in Gochara. There may be unnecessary expenditure and travel is likely to be troublesome.  You may have to work hard in your job to succeed.  There may be lack of bodily comforts. You may have to visit hospitals and health may not be good. You need to be careful with lawsuits and litigations

9. for all persons whose natal moon is in capricorn (uthiradam 2, 3, 4, thiruvonam 1-4, avittam 1, 2)

Jupiter is highly favorable in 9th house in Gochara. There will good income and financial gains.  Your will show lot of interest in religious activities  and you are likely to attend as the religious functions. This period is particularly good time for authors, publishers, professors and people related to the field of books. There is also a possibility of foreign distance travel.

10. for all persons whose natal moon is in SAGITTARIUS ( moolam 1-4, pooradam 1-4, uthiradam 1)

Jupiter is not favorable in 10th house in Gochara. You may develop negative thinking and a feeling of wretchedness during this time. Some unfulfilled desires may make you irritable as well. Avoid wandering about, as you are most likely to be disappointed during this particular time. This is the time when you may need to consciously avoid arguments with your seniors at work and with your elders at home.

11. FOR ALL PERSONS WHOSE NATAL MOON IS  IN SCORPIO (VISAKAM 4, ANUSHAM 1-4, KETTAI 1-4)

Jupiter is favorable in 11th house in Gochara.  This signifies a good time. During this time you may expect promotions at the workplace, gain in trade and even a position of higher authority in your professional life. This could also prove to be a socially good time for you, as your status in the society is likely to be heightened. Finances would be good and most of you would consider buying landed property, jewellery, new vehicles and acquiring material comfort in this time. You would also enjoy sound health and a peaceful mind.

12. FOR ALL PERSONS WHOSE NATAL MOON IS IN LIBRA (CHITRA 3,4, SWATHI 1-4, VISAKAM 1TO 3)

Jupiter is not favorable in 12th house in Gochara. This indicates expenditure for you. The outflow of money is expected to be greater than the inflow. Above all, you may also find difficulty in trade and business, especially related to the cattle business. However, you are also likely to spend some money on auspicious occasions and on long distance travels. This period may force upon you a phase in which you may have to stay away from your native place and away from your children. If employed, hold on to your position and rank at work as this period may put a risk to these as well.

JUST CHECK WHERE YOUR NATAL MOON IS PRESENT IN YOUR BIRTH CHART, OR CHECK YOUR JENMA NAKSHATHRAM, BIRTH STAR AND SEE THE RESULTS YOURSELF.  i HAVE MENTIONED A STATEMENT NAMED AS VEDHA. IF THERE ARE PLANETS IN PARTICULAR LOCATIONS FROM NATAL MOON IN YOUR BIRTH CHART (NOT TRANSIT CHART) IT MAY CREATE VEDHA TO JUPITER. A VEDHA PLANET CAN ALTER GOOD OR BAD RESULTS. 

VEDHA - OBSTRUCTION
VIPAREETHA VEDHA - NEUTRALISATION
2
12
3
7
5
4
4
5
7
3
12
2
9
10
10
9
11
8
8
11
THIS MEANS THAT IF A PLANET IS IN 12TH FROM MOON IN NATAL CHART, IT WILL SPOIL THE GOOD EFFECTS OF JUPITER IN 2ND. THIS IS APPLICABLE FOR LEO.

IF A PLANET IS IN 7TH FROM MOON, THEN BAD EFFECTS OF JUPITER IN 3RD WILL GET NULLIFIED.

READ YOURSELF AND GET TO KNOW THE EFFECTS.


Saturday, February 13, 2016

A LETTER FROM ONE OF OUR STUDENTS

To
Feb 12 at 3:46 PM

Dear Sir, Madam

Kindly accept our heartfelt and sincere thanks for systematically leading us through the complex concepts of this amazing science!

I really enjoyed learning the science and eagerly look forward to the advanced topics in the coming months.

My humble namaskarams for spearheading the movement of education in this field!

The test we wrote last week only proved to me that I have miles to cross before I can get proficiency in astrology! But it was a fantastic test paper!

For the puja on 14th, I would like to bring about 70 pieces of homemade sweet,
which my wife has kindly consented to prepare.
Please let me know if 70 pieces would suffice or more would be needed.

Thanks and regards

Raghuraman


A remedial action attempt on March 5th at Chennai

இந்த உலகத்தில் தீமைகள் ஏற்படும் சூழ்நிலைகள் உறுவாகும்போது மானுடர்களான நம்மால் எதுவும் செய்து அதைத் தடுத்து விட முடியுமா? மானுடரால் முடியாத நிலைகளில் இறைவனைத் தானே சரணடைய வேண்டும். இறைவனே இயற்கை வடிவத்தில் இருக்கின்றான். அந்த இயற்கை சீற்றங்களை எப்படிப்பட்ட விஞ்ஞானத் திறமையினாலும் சந்திக்க முடிவதில்லை என்பது தானே உண்மை. சமீபத்தில் பார்த்தோமே சென்னை பட்ட துயரத்தை. துயரம் வந்தடைந்த பின்னர் அதை மானுடரால் துடைக்கத்தான் முயல முடியும், வராமல் தடுக்க முடியுமா?
ஏற்கனவே சொன்னதுபோல வருகின்ற மார்ச் மாதம் 9 ஆம் நாள் ஏற்படும் கிரகணம் ஒரு முக்கியமான ஒன்று. (சனி, ராகு, செவ்வாய்க் கிடையில் ஏற்படும் கூட்டு, அனைத்து கிரகங்களும் மூன்று கேந்திரங்களில் வாசம்) அதன் பின்னர் சில நாட்களில் உலகத்தில் துன்பத்தின் அலைகள் பெருமளவு வீசக்கூடும் என்பது கணிப்பு. இதிலிருந்து முடிந்தவரை நாம் பாதிக்கப்படாமல் தப்பிக்க அந்த இறை சக்தியை சரணடைவதுதான் நமக்கு கிடைத்த ஒரே வழி.
மிக முக்கியமாக செவ்வாயும் சனியும் (இரண்டு பகை கிரகங்கள்) விருச்சிகத்தில் வக்ர கதியில் செயல் படுகின்றார்கள். ராகுவால் பாதிக்கப்பட்ட குருவும் சிம்மத்தில் வக்கிர கதியில் செயல் படுகின்றார். மற்ற அனைத்து கிரகங்களும் லக்னத்துடன் சேர்ந்து கும்பத்தில் வாசம் செய்கின்றன. இதனால் தனி மனித வாழ்க்கையிலும் பாதிப்புகள் ஏற்படும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் லக்னமாகவோ அல்லது ராசியாகவோ அமையும் அனைவரும் பரிகாரம் அவசியம் செய்து கொள்ள வேண்டும்.
இதுபற்றி வல்லுனர்களிடம் கலந்தாலோசித்தபோது அவர்கள் காட்டிய வழிதான் மார்ச் 5 ஆம் நாள் ஸப்தரிஷி ஜோதிட மையத்தின் சார்பில் நாம் செய்ய இருக்கும் “தேவி மஹாத்மிய ஜபம்” 10,000 முறை + “ருத்ர பாராயணம்” ஒரு முறை + “தேவி மஹாத்மிய விசேஷ ஹோமம்” 1,000 முறை + ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திர பாராயணம் ஒரு முறை ஒருமுறை என்கிற கூட்டுப் பிரார்த்தனை (ராகு + செவ்வாய் + சனி இவர்களின் தேவதைகளை அழைத்து). 
இவற்றை முறையாகச் செய்திட தேவி உபாசனை செய்பவர்களை அழைக்க முடிவு செய்துள்ளோம். அவர்களுடன் நாமும் சேர்ந்து ஜபம் செய்யலாம். சற்று கடினமான பிரார்த்தனைதான் இது. முறையாகப் பயிற்சி பெற்றவர்களால் நிகழ்த்தப்படுவதால் எளிதில் நடைபெறும் என்பதில் ஐயமில்லை.
அப்படி உலக நன்மைக்காக நம்முடன் இந்த பிரார்த்தனைகள் செய்ய வரும் தேவி உபாசகர்களுக்கு தகுந்த மரியாதை செய்து அவர்களை கௌரவிக்க வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிக்க வேண்டும். அவர்கள் தேவியின் உபாசகர்கள் என்பதால் இறை தூதர்களாக செயல் படுவர். அவர்கள் செய்யும் ஜபத்தின் பின்னர் அவர்களது சக்தி அதிகரிக்கும். அவர்களது ஆசீர்வாதம் நமக்கு பெரும் பயனளிக்கும்.
இந்த மஹா ஹோமம் + ஜபம் சேர்ந்த பிரார்த்தனை மந்தைவெளியில் உள்ள ஸ்ரீ லலித் மஹாலில் நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இறைவனின் பிரசாதம் உணவாக அளிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என கணிக்கப்படுகிறது.
இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் சங்கல்பம் செய்துகொள்ள 500 ரூபாய் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.
தேவி உபாசகர்களுக்கு வஸ்த்ரம், தக்ஷிணை ஆகியவற்றுக்கும் அன்னதானத்துக்கும் நன்கொடைகள் வரவேர்க்கப்படுகின்றன. இப்படி நன்கொடைகள் கொடுப்பதால், கொடுப்பவர்களுக்கு பல மடங்கு நன்மைகள் பெருகும் என்பது உண்மை. இது ஒரு பரிகாரச் செயல்தான்.
தேவி உலகத்தைக் காக்கும் தாய். அவளை சர்வ மங்கள மாங்கல்யே என்றும் சர்வார்த்த சாதகே என்றும் அழைக்கிறோம். மிகவும் கொடிய அசுரனான சும்பாசுரனை அவள் வதம் செய்த பிறகு அவளிடம் இந்திரன் போன்ற தேவர்கள் அக்னி தேவனின் தலைமையில், தேவியை மலர்ந்த தாமரை புஷ்பங்களுடன் வணங்குகிறார்கள். அவர்கள் அவளை காத்யாயனி என்ற ரூபத்தில் வணங்குகிறார்கள். சண்டிகாவின் இன்னொரு பெயர்தான் காத்யாயனி. பார்வதி தேவியே காத்யாயன மஹரிஷியின் மகளாக ஒருமுறை அவதரித்தாள்.

த்யானம்
ஓம் பாலார்கவித்யுதிம் இம்துகிரீடாம்
தும்ககுசாம் னயனத்ரயயுக்தாம் |
ஸ்மேரமுகீம் வரதாம் குஶபாஶ
பீதிகராம் ப்ரபஜே புவனேஶீம் |

தேவி ப்ரபன்னார்தி ஹரே ப்ரசீத
ப்ரசீத மாதர் ஜகதோகிலஸ்ய
ப்ரசீத விஸ்வேஸ்வரி பாஹி விஸ்வம்
த்வமீஸ்வரி தேவி சரா சரஸ்ய
என்று அவளிடம் மனமுருகி பிரார்த்தனை செய்கிறார்கள்.
உன்னிடம் சரணடைவர்களின் துன்பத்தைப் போக்குபவளே, தேவி, எங்களிடம் கருணை காட்டு. உனது அனுக்ரகங்களை எங்களுக்கு வழங்கு. உலகத்தின் அன்னையே, கருணை காட்டு. பிரபஞ்சத்தின் தாயே, இந்த பிரபஞ்சத்தை அழிவுகளிலிருந்து காப்பாற்று. அசையும் பொருட்களையும் அசையாப் பொருட்களையும் ஆள்பவளே தேவியே, காப்பாற்று.
ஸ்ரீ தேவி மஹாத்மியத்தில் 11 ஆவது அத்தியாயத்தில் உள்ள இந்த ஸ்லோகமானது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. இதையே 10,000 முறை ஜபம் செய்யவும் 1,000 முறை ஹோமம் செய்யவும் நமக்கு வழிகாட்டும் ஒரு தேவி உபாசகர் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளார்.
இந்த ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து நீங்களும் ஜபத்தில் பங்கு பெறலாம். ஒரு பிரார்த்தனை பலவிதமான மக்களுடன் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையாக செய்யப்படும்போது அதன் பலன், பல மடங்கு பெருகி அதனால் அந்த முயற்சியில் கூட இருக்கும் அனைவரும் அவர்களது குடும்பங்களும் பலன் பெறும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
இந்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள விரும்புவர்கள் திருமதி உஷா ராதாகிருஷ்ணன் அவர்களிடமும் திரு நாகராஜன் அவர்களிடமும் பெயரும் பொருளும் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். திருமதி உஷாவின் தொலை பேசி எண்: 9444047472. திரு நாகராஜனின் தொலைபேசி எண்: 9841948752
இந்த பெறும் முயற்சிக்கு நன்கொடை அளிப்பவர்களும் திருமதி உஷாவை தொடர்பு கொள்ளலாம்.
நமது சப்தரிஷி ஜோதிட மையத்தை சேர்ந்தவர்கள் அவர்களது நண்பர்களுக்கும் தெரிவித்து இதில் கலந்து கொள்ள செய்யலாம்.

வணக்கத்துடன்

நாராயணன். ஸ்ரீநிவாச சர்மா

Tuesday, January 19, 2016

Why I am concerned about the coming Solar Eclipse

நான் ஏன் பயப்படுகிறேன்?
 
வருகின்ற மார்ச் மாதம் 9 ஆம் நாள் ஒரு முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், பசிபிக் பெருங்கடல் பகுதியிலும் தெரியும். இந்தியாவில் இது பூரணமாக இருக்காது, பகுதியாக இருக்கும். பூரட்டாதி நக்ஷத்திரத்தில் கேது க்ரஸ்தமாக தோன்றும். காலை 05:09 லிருந்து 06:47 வரை இருக்கும்.
 
பொதுவாக பூரட்டாதி நக்ஷத்திரத்தில் ஏற்படும் சூரிய கிரஹணம் பூமி அதிர்வுகளை ஏற்படுத்தும். கூர்ம சக்கரத்தில் பூரட்டாதி நக்ஷத்திரம் வடக்கு திசையைக் குறிப்பதாலும், இந்த கிரஹணம் ஏற்படும் ராசி கும்பம் மேற்கு திசையைக் குறிப்பதாலும் இது இந்தியாவின் வட மேற்கு திசையில் உள்ள இமயமலைப் பகுதிகளைத் தாக்கும். வடக்கில் உள்ள உத்தராகண்ட், உத்தரபிரதேசம், தில்லி, ஹரியானா, ஹிமாசல் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இதன் தாக்கம் இருக்கும். இந்தியாவுக்கு வட மேற்கில் இருக்கும் பாகிஸ்தானிலும், இந்தியாவின் மேற்கு மாநிலங்களான குஜராத், ராஜஸ்தானிலும் இதன் தாக்கம் இருக்கும்.
 
சூரிய கிரகணம் ஏற்பட்ட 15 நாட்களில் இந்த பூகம்பம் ஏற்படலாம். சூரிய கிரகணம் ஏற்படும் நாளில் உள்ள கிரக நிலைகளைப் பாருங்கள்.
 
 
 
 
 
 
சந், சூரி
கேது
லக், சுக், சூரி, புத, சந், கேது
ராசி
 
லக்னம்
நவாம்சம்
 
 
ராகு, (குரு)
சனி, புத
 
 
சனி, செவ்
 
 
ராகு
(குரு)
சுக்
செவ்
 
பவிஷ்யபல பாஸ்கரா என்னும் மிகவும் பழமையான பொது உலக ஜோதிட நூலில் சொல்லப்பட்ட விபரம்:--
ஒரு கிரகணத்தின்போது சூரியனும் சந்திரனும் தீயவர்களுடன் சேர்ந்து தீயவர்களால் பார்க்கப்பட்டால் அரசர்களையும் அவர்களது நாடுகளையும் அழிக்கும்.
லக்ன கேந்திரங்களான லக்னம், 7 ஆம் வீடு, 10 ஆம் வீடு ஆகியவற்றில் அனைத்திலும் தீயவர்கள் குடிகொண்டிருக்கின்றார்கள். 10 ஆம் வீட்டிலிருந்து செவ்வாய், லக்னம், சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன் கேது ஆகியவற்றைப் பார்க்கிறார். 7 ஆம் வீட்டிலிருந்து ராகுவும் பார்க்கிறார். ராகுவுடன் சேர்ந்து பலமிழந்த குருவின் பார்வை இங்கு பலனளிக்க முடியாத நிலையில் உள்ளது. 10 ஆம் வீட்டில் இருக்கும் சனி ராகுவையும் குருவையும் பார்க்கிறார்.
சூரியனுக்கு செவ்வாயின் கேந்திர பார்வை ஒரு யுத்தத்தைக் கொண்டுவரும். இந்த யுத்தம் மேற்கு நாடுகளில் ஒன்றில் நடக்கும். அது இந்தியாவின் மேற்கிலும் நடக்கலாம். ஏனெனில் இந்த நிலை மேற்கு திசையைக் குறிக்கும் கும்பத்தில் ஏற்படுகிறது.
அந்த நேரத்தில் சனி கேட்டை நக்ஷத்திரத்தில் பவனி வருகிறார். சில பழைய நூல்கள் சனி கேட்டையில் கோசாரத்தில் பவனி வரும் காலை மேற்கு திசையில் ஒரு யுத்தம் வரும் என்கின்றன.
ஜோதிடரீதியாக இந்தியாவின் மேற்கு பகுதியில் யுத்தம் வரும் வாய்ப்பு அதிக அளவில் தென்படுகின்றது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்திய பாகிஸ்தான் உறவுகள் சீர்குலைந்து யுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம் ஜோதிடரீதியாகத் தென்படுகின்றன. அதுபோல மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் (இந்தியாவின் மேற்கு பகுதி) யுத்தத்துக்கான சாத்தியக் கூறுகள் நிறைய இருக்கின்றன. கூர்ம சக்கரம் இதைத்தான் சொல்லுகிறது.
ஏப்ரல் மாதம் 18 ஆம் தேத்திக்குப் பின்னர் சுமார் 20 நாட்கள் சனி, செவ்வாய், குரு ஆகிய மூவரும் வக்கிர கதியில் பயணம் செய்கிறார்கள். அப்பொழுது சைனாவின் வடக்கு, ஹிந்துகுஷ் மலைப்பகுதிகள், ஆஃப்கனிஸ்தான், பாகிஸ்தான் போன்ற பகுதிகளில் இன்னொரு பூகம்பம் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன.
ஆக இந்த கிரகணம் யுத்தம் மற்றும் இயற்கை பேரழிவு ஆகியவற்றுக்கு ஆரம்பமாக இருக்கும் சாத்தியக் கூறுகள் நிறைய ஜோதிடரீதியாகத் தென்படுகின்றன என்பதில் ஐயமில்லை.
இன்னுமொரு சூரிய கிரகணம் செப்டம்பர் 1, 2016 அன்று ராகு க்ரஸ்தமாக ஏற்படுகின்றது. அந்த கால கட்டத்திலும் சிம்மத்தில் சூரியன், சந்திரன், ராகு அமர்கிறார்கள். அதன் கேந்திரமான விருச்சிகத்தில் சனியும், செவ்வாயும் அமர்கிறார்கள். கேது கும்பத்தில் அமர்கிறார். இந்த நிலையும் உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.
பிருஹத் சமிதையில் சொல்லப்பட்ட நிலை:--
·         சூரியன் அல்லது சந்திரனின் உதய நேரம் அல்லது அஸ்தமன நேரத்தில் ஒரு கிரகணம் ஏற்படின் அது பயிர்களை நாசம் செய்யும்;அரசர்களுக்கு தொல்லை தரும்.
·         கிரகணப் புள்ளி கும்பத்தில் அமைகிறது. அது கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வேலை செய்யும். ஏனெனில் செவ்வாய் அந்த ஆறு மாதங்கள் விருச்சிகத்திலிருந்து கும்பத்தை பார்க்கிறார்.
·         செவ்வாய் சூரியனையும் சந்திரனையும் கிரகணத்தின்போது பார்ப்பது நெருப்பினால் ஆபத்து, யுத்தம் மற்றும் திருடர்களால் ஆபத்து போன்றவற்றைக் கொண்டு வரும்.
·         இந்த சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து 23 ஆம் தேதி ஒரு சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. அது இந்தியாவில் தெரியாது. இப்படி ஒரே மாதத்தில் இரு கிரகணங்கள் ஏற்படுவது அழிவைத்தரும்.
·         குரு வக்ரகதியில் பயணிக்கும்போது சனியும் ராகுவும் அதை பாதிக்கும்போது இக்கிரகணத்தின் தாக்கம் அதிகமாகிறது. தேவகுரு பிருஹஸ்பதியின் ஆசீர்வாதம் கிடைக்காமல் போய்விடுகிறது.
·         தன காரகன் குரு பலமிழப்பதால் ஷேர்மார்க்கெட்டில் வீழ்ச்சி ஏற்படலாம். பொருளாதார சிக்கல்கள் ஏற்படலாம்.
·         எல்லா கிரகங்களும் கேந்திரத்தில் அமைவது தீய பலன்களுக்கு வலு சேர்க்கிறது.
·         நவாம்சத்தில் செவ்வாயும், சனியும் பூமி தத்துவத்தால் ஆளப்படும் ராசிகளில் அமர்ந்திருப்பது பூகம்பத்துக்கு வழிவிடும் என்று ஜோதிட மேதை பி. வி. ராமன் அவர்கள் தன்னுடைய நூல் ஒன்றில் சொல்லியுள்ளார்.
 
நாம் செய்ய வேண்டியது என்ன?
 
·         உலக அமைதிக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
·         துர்கைக்கு ஹோமம், விஷ்ணுவுக்கு திருமஞ்சனம், சிவனுக்கு ருத்ராபிஷேகம் போன்றவற்றை நிகழ்த்தி உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
·         ஓம் நமோ பகவதே சூகராய நமஹ என்னும் மந்திரத்தை 108 என்கிற அலவில் நிறைய நாட்கள் ஜபிக்க வேண்டும்.
 
 

New Astrology Classes

Dear Friends,

Those who are in Chennai can learn astrology - Vedic Astrology with us. We are starting fresh batch of classes on February 14th 2016 at Karnataga Sanga School, Habibullah Road T Nagar Chennai - 17. Classes are held only on Sundays between 09:30 am and 12: 30 pm. The teaching faculty are qualified astrologers with a lot of practical experience. One has to study the fundamentals for six monts - 24 Sundays and Prediction for 24 Sundays. The fees are the lowest in Chennai - Rs.2000.00 for six months. Interested persons may contact S Narayana at 9381713052, Shekaran at 9841431273 and SHYAMALA AT 9840136403.

DO NOT MISS THIS GOLDEN OPPORTUNITY.

S Narayanan

Very Simple Remedies of Birth Stars.

மிக எளிதில் செய்யக் கூடிய நக்ஷத்திர பரிகாரங்கள்
நாராயணன்
சப்தரிஷி அருள் வாசகர்களுக்கு:
ஒவ்வொரு நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் நிறையும் உண்டு, குறையும் உண்டு. குறைகளை நிவர்த்தி செய்யும் பரிகார முறைகள் நமது மஹரிஷிகளால் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் எளிதான சிலவற்றை உங்களுக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவை முதலில் சிலருக்கு பரிசோதனை முயற்சியாக அளிக்கப்பட்டன. அவை பலன் தரும் நிலை ஆச்சர்யகரமானது. சில ஜோதிட விர்ப்பண்ணர்களின் அனுபவ முறைகள் சொல்லப்பட்டுள்ளன. முதலில் படிக்கும்போது மூட நம்பிக்கையாகத் தோன்றலாம். ஆயினும் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்கிற வள்ளுவரின் வாக்குப் படி முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் வியப்படைவீர்கள் என்பதில் ஐயமில்லை.
பொதுவான பரிகாரங்கள்
·         எப்பொழுதும் உங்கள் நக்ஷத்திரத்தின் படத்தையும் அதன் தேவதையின் படத்தையும் உங்கள் அருகில் (PURSE, HANDBAG) வைத்திருங்கள். உங்களது செயல்பாடுகள் எப்பொழுதும் அந்த நக்ஷத்திரத்தின் குணங்களை ஒட்டி இருக்கும்.
·         உங்களது பிறந்த நக்ஷத்திரத்திலிருந்து 16 ஆவது நக்ஷத்திரத்திற்கு பரிகாரம் செய்யுங்கள்.
·         உங்களது ஜாதகத்தில் பரணி நக்ஷத்திரத்தில் ஏதேனும் கிரகம் இருந்தால் நீங்கள் செய்யும் செயல்களுக்கு உண்டான பலன் குறைவாகவே கிடைக்கும். அதனால் அப்படி உள்ள ஜாதகர்கள் வாழ்க்கை முழுவதும் பரணி நக்ஷத்திர பரிகாரம் செய்திடல் வேண்டும்.
·         நீங்கள் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்போது அல்லது நீண்ட நேரம் வீட்டை விட்டு வெளியில் இருக்கும் நிலை வந்தால் உங்கள் வாசல் கதவின் வெளிப்புறம் இடது புறம் ஒரு ஊதுபத்தியை (சந்தன மணம் கமழும்) ஏற்றி வைத்துவிட்டு கேதுவை வணங்கி கேதுவின் தேவதையான பிள்ளையாரை வணங்கிச் செல்லுங்கள். (கேது உங்கள் ஜாதகத்தில் பிரச்சினை தரும் நிலையில் இருப்பின் மட்டுமே இது அவசியம்)
·         உங்கள் ஜாதகத்தில் ராகு தவறான இடத்தில் இருந்தாலும் அல்லது தவறான இடத்துக்கு ராகு கோசாரத்தில் இடம் பெயர்ந்தாலும், உங்கள் வீட்டு வாசல் படியின் கதவின் வலப் புறத்தில் சந்தன மணம் கமழும் ஊதுபத்தியை ஏற்றி வையுங்கள்.
·         கேதுவால் வரும் தொல்லைகளுக்கு காளி அன்னைக்கு 11 எலுமிச்சம்பழம் கொண்டு கட்டிய மாலையை அணிவியுங்கள்.
நக்ஷத்திர பரிகாரங்கள்
அஸ்வினி
·         செவ்வாய் + கேதுவின் தொடர்பு
·         மருத்துவ பரிசோதனைக்கு மிகவும் உகந்த நக்ஷத்திரம்
·         துன்பப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி செய்யுங்கள்.
·         நாய்க்கு உணவளியுங்கள்
·         வெள்ளை எள்ளில் செய்த பக்ஷணத்தை குழந்தைகளுக்கு தானம் செய்யுங்கள்.
·         வியாழக்கிழமைகளில் லக்ஷ்மிநாராயணர் கோவிலிலும், மாஹான்கள் சன்னிதியிலும் (ராகவேந்திரர், சாய்பாபா, காஞ்சி பரமாசார்யா) ஏலக்கி வாழைப்பழங்கள் வைத்து பிரார்த்தனை செய்து அவற்றை தானம் செய்யுங்கள். குறைந்தது நான்கு வாழைப் பழங்கள் வைக்க வேண்டும்.
·         இரட்டைக் குதிரையின் பின்னால் சூரியன் அமர்ந்தது போன்ற படம் உங்களிடம் எப்பொழுதும் வைத்திருங்கள்.
பரணி
·         பொதுவாக பரணி நக்ஷத்திரத்தில் ஒரு கிரகம் இருந்தாலும், அந்த நக்ஷத்திரத்தில் ஒரு கிரகம் கோசாரத்தில் பயணம் செய்தாலும் அந்த கால கட்டத்தில் மீன லக்னத்தவர்க்கு பொருளாதார ரீதியாக நஷ்டம் ஏற்படும். பரணியில் கிரகங்கள் ஏதுமில்லாத ஜாதகருக்கு பாதிப்பு இருக்காது. ஆயினும் மேஷம் எந்த பாவமாக அமைகிறதோ அந்த பாவத்தில் எல்லோருக்கும், பரணியில் சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் கோசாரத்தில் பயணம் செய்யும் கால கட்டத்தில் அவர்களது செயல்பாட்டினால் கிடைக்க வேண்டிய லாபம் அல்லது பலன் குறைவாகவே கிடைக்கும்.
·         பரணி நக்ஷத்திரத்தன்று யாருக்கும் பணம் கடனாகக் கொடுக்காதீர்கள். பயணம் செய்வதும் தவிர்ப்பது நல்லது. பணம் திரும்பி வராது. பயணம் வேற்றி பெறாது.
·         உங்கள் வீட்டில் சுபீக்ஷம் நிலைக்க வேண்டும் என்றால் பரணி நக்ஷத்திர தினங்களில் வீட்டில் கட்டாயம் சர்க்கரையும், கல் உப்பும் வைத்திருக்க வேண்டும்.
·         மூன்றங்குலத்துக்கு மூன்றங்குலம் ஒரு துணியை எடுத்துக்கொண்டு அதில் படத்தில் உள்ளதுபோன்று மூன்று புள்ளிகளை சிவப்பு நிறத்தில் வைத்து அதை படமாக வீட்டில் தொங்க விடுங்கள். வீட்டில் சுபீக்ஷம் நிலவும்.


     






 0                            0





               0
 








·         பரணியில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் சிறிது பாலும், சிறிது தயிரும் தன் தலையில் சேர்த்துக் குளிக்க வேண்டும். இது அவரது பொருளாதாரத்தையும் உறவு நிலைகளையும் காக்கும்.
·         பரணி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், பரணி + வெள்ளிக்கிழமை + திரயோதசி சேரும் நாட்களில் உடலுறவு கொண்டால் குழந்தை தடையின்றி பிறக்கும்.
கார்த்திகை
·         சூரியன் + செவ்வாய் மற்றும் சூரியன் + சுக்கிரன் தொடர்பு
·         கார்த்திகை நக்ஷத்திரமும் ஞாயிரும் கூடிய தினத்தில் கணபதி ஹோமம் மற்றும் நவக்ரஹ ஹோமம் செய்யுங்கள். பின்னர் சமையல் பாத்திரங்கள், கத்தி ஆகியவற்றை ஹோமம் செய்த ஆசார்யனுக்கு தானம் செய்யுங்கள்.
·         உங்களுடன் எப்பொழுதும் ஒரு கத்தி வைத்திருங்கள்.
ரோஹிணி
·         சந்திரன் + சுக்கிரன் கூட்டு.
·         இளம் பெண்களுக்கு நல்ல வாசனை திரவியங்கள், பொட்டுக்கள், கை விரல்களில் போடும் நக பாலிஷ், பிந்தி போன்ற பொருட்களை பரிசாக அளியுங்கள்.
·         திருமணமானவரென்றால் ரோஹிணி நக்ஷத்திரத்தன்று உங்கள் களத்திரத்துடன் நேரத்தை செலவிடுங்கள்.
·         மகாலக்ஷ்மிக்கு (கடவுள்) முத்துமாலை ஆபரணம் அணிந்து அழகு பாருங்கள்.
மிருகசீரிஷம்
·         செவ்வாய் + சுக்கிரன், செவ்வாய் + புதன் கூட்டு
·         செவ்வாய் + சுக்கிரன் கூட்டு நக்ஷத்திர பாதத்தில் பிறந்தால் ஒரு இள வயதுள்ள வேதம் பயிலும் பிரும்மச்சாரி பிராமணனுக்கு நெய்யும், வேஷ்டியும் மிருக சீரிஷ நக்ஷத்திரத்தன்று தானம் செய்யுங்கள்.
·         செவ்வாய் + புதன் கூட்டு நக்ஷத்திர பாதத்தில் பிறந்திருந்தால், சிவப்பு வர்ணத்தில் உள்ள பென்சில் அல்லது பேனா ஒரு குழந்தைக்கு செவ்வாய் மற்றும்  புதன் கிழமைகளில் கொடுங்கள். (வெளியில் சிவப்பு நிறம். மையின் நிறம் கருப்பாக இருக்கட்டும்). இப்படி 16 செவ்வாய் மற்றும் புதன் கிழமைகள் கொடுங்கள்.
·         புதன் கிழமைகளில் புறாவுக்கு பச்சை தானியங்கள் அளியுங்கள். சிலருக்கு தோலில் பிரச்சனை இருந்தாலும், முடி கொட்டுவது போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் சரியாகும். புதன் கிழமை + மிருகசீரிஷம் சேர்ந்த அன்று இதை செய்தால் நல்ல பலன் தரும்.
திருவாதிரை
·         புதன் + ராகு கூட்டு
·         நாய்களுக்கு உணவளியுங்கள்
·         பிராணிகளை பாதுகாக்க உதவுங்கள்.
·         மாமிச உணவு உண்பவராக இருப்பின், திருவாதிரை நக்ஷத்திரத்தன்று மாமிச உணவு உட்கொள்ளாதீர்கள்.
·         பச்சை பயறு தானியத்தை அல்லது பச்சை பயிறினால் செய்த உணவை பைரவருக்கு நைவேத்யம் செய்யுங்கள். அது புதன் + தேய்பிறை அஷ்டமியாக இருப்பின் மிகவும் விசேஷம்.
புனர்பூசம்
·         குரு + புதன் கூட்டு
·         பச்சை புடவையையும், பச்சை பயிறு தானியத்தையும் புனர்பூச நக்ஷத்திரத்தன்று வேதம் படித்த முதியவருக்கு தக்ஷிணையுடன் தானம் செய்யுங்கள்.
·         உபன்யாசம் நடக்கும் இடங்களுக்கு சென்று உபன்யாசத்தை செவி மடுங்கள். உபன்யாசம் ஏற்பாடு செய்து பலரும் கேட்க உதவுங்கள்.
·         புனர்பூசம் 4 ஆம் பாதத்தில் பிறந்தவர் என்றால் பெண் பூனைக்கு பால் அளியுங்கள்.
பூசம்
·         சனி + சந்திரன் கூட்டு
·         இதன் அடையாளம் பூ. அதனால் ஒரு பூச்செடியை நட்டு, அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்து, அந்த புஷ்பங்களை மஹவிஷ்ணுவுக்கு அளியுங்கள். திங்கள் கிழமை அல்லது சனிக்கிழமை மிகவும் விசேஷம்.
·         ஒரு கழுதைக்கு உணவளியுங்கள். கடின உழைப்புக்கு உதாரணமான மிருகம் அது.
ஆயில்யம்
·         புதன் + சந்திரன் கூட்டு
·         சிவனுக்கு புதன் மற்றும் திங்கள் கிழமைகளில் பாலபிஷேகம் செய்யுங்கள்.
·         ராமேஸ்வரம், திருச்செந்துர் மற்றும் வேதாரணியம் சென்று அங்கு கடலுக்கு பால் அளியுங்கள். ஆயில்யம் முதல் பாதம் என்றால் ராமேஸ்வரம், இரண்டாம் பாதம் என்றால் திருச்செந்தூர், மூன்றாம் பாதம் என்றால் வேதாரணியம், நான்காம் பாதம் என்றால் ராமேஸ்வரம்.
·         ஒரு ஆண் பூனைக்கு பால் அளியுங்கள்.
மற்ற நக்ஷத்திரங்கள் அடுத்து வரும் இதழ்களில்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&