இந்த உலகத்தில் தீமைகள் ஏற்படும் சூழ்நிலைகள்
உறுவாகும்போது மானுடர்களான நம்மால் எதுவும் செய்து அதைத் தடுத்து விட முடியுமா?
மானுடரால் முடியாத நிலைகளில் இறைவனைத் தானே சரணடைய வேண்டும். இறைவனே இயற்கை
வடிவத்தில் இருக்கின்றான். அந்த இயற்கை சீற்றங்களை எப்படிப்பட்ட விஞ்ஞானத்
திறமையினாலும் சந்திக்க முடிவதில்லை என்பது தானே உண்மை. சமீபத்தில் பார்த்தோமே
சென்னை பட்ட துயரத்தை. துயரம் வந்தடைந்த பின்னர் அதை மானுடரால் துடைக்கத்தான் முயல
முடியும், வராமல் தடுக்க முடியுமா?
ஏற்கனவே சொன்னதுபோல வருகின்ற மார்ச் மாதம் 9 ஆம்
நாள் ஏற்படும் கிரகணம் ஒரு முக்கியமான ஒன்று. (சனி, ராகு, செவ்வாய்க் கிடையில்
ஏற்படும் கூட்டு, அனைத்து கிரகங்களும் மூன்று கேந்திரங்களில் வாசம்) அதன் பின்னர்
சில நாட்களில் உலகத்தில் துன்பத்தின் அலைகள் பெருமளவு வீசக்கூடும் என்பது கணிப்பு.
இதிலிருந்து முடிந்தவரை நாம் பாதிக்கப்படாமல் தப்பிக்க அந்த இறை சக்தியை
சரணடைவதுதான் நமக்கு கிடைத்த ஒரே வழி.
மிக முக்கியமாக செவ்வாயும் சனியும்
(இரண்டு பகை கிரகங்கள்) விருச்சிகத்தில் வக்ர கதியில் செயல் படுகின்றார்கள்.
ராகுவால் பாதிக்கப்பட்ட குருவும் சிம்மத்தில் வக்கிர கதியில் செயல் படுகின்றார்.
மற்ற அனைத்து கிரகங்களும் லக்னத்துடன் சேர்ந்து கும்பத்தில் வாசம் செய்கின்றன.
இதனால் தனி மனித வாழ்க்கையிலும் பாதிப்புகள் ஏற்படும். ரிஷபம், சிம்மம்,
விருச்சிகம் மற்றும் கும்பம் லக்னமாகவோ அல்லது ராசியாகவோ அமையும் அனைவரும்
பரிகாரம் அவசியம் செய்து கொள்ள வேண்டும்.
இதுபற்றி வல்லுனர்களிடம் கலந்தாலோசித்தபோது அவர்கள்
காட்டிய வழிதான் மார்ச் 5 ஆம் நாள் ஸப்தரிஷி ஜோதிட மையத்தின் சார்பில் நாம் செய்ய
இருக்கும் “தேவி மஹாத்மிய
ஜபம்” 10,000 முறை + “ருத்ர பாராயணம்” ஒரு முறை + “தேவி மஹாத்மிய விசேஷ ஹோமம்”
1,000 முறை + ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திர பாராயணம் ஒரு முறை ஒருமுறை என்கிற
கூட்டுப் பிரார்த்தனை (ராகு + செவ்வாய் + சனி இவர்களின் தேவதைகளை அழைத்து).
இவற்றை முறையாகச் செய்திட தேவி உபாசனை செய்பவர்களை
அழைக்க முடிவு செய்துள்ளோம். அவர்களுடன் நாமும் சேர்ந்து ஜபம் செய்யலாம். சற்று
கடினமான பிரார்த்தனைதான் இது. முறையாகப் பயிற்சி பெற்றவர்களால் நிகழ்த்தப்படுவதால்
எளிதில் நடைபெறும் என்பதில் ஐயமில்லை.
அப்படி உலக நன்மைக்காக நம்முடன் இந்த
பிரார்த்தனைகள் செய்ய வரும் தேவி உபாசகர்களுக்கு தகுந்த மரியாதை செய்து அவர்களை
கௌரவிக்க வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிக்க வேண்டும். அவர்கள்
தேவியின் உபாசகர்கள் என்பதால் இறை தூதர்களாக செயல் படுவர். அவர்கள் செய்யும்
ஜபத்தின் பின்னர் அவர்களது சக்தி அதிகரிக்கும். அவர்களது ஆசீர்வாதம் நமக்கு பெரும்
பயனளிக்கும்.
இந்த மஹா ஹோமம் + ஜபம் சேர்ந்த பிரார்த்தனை மந்தைவெளியில் உள்ள ஸ்ரீ லலித்
மஹாலில் நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இறைவனின் பிரசாதம்
உணவாக அளிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என கணிக்கப்படுகிறது.
இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் சங்கல்பம்
செய்துகொள்ள 500 ரூபாய் கட்டணம் வசூலிக்க
முடிவு செய்துள்ளோம்.
தேவி உபாசகர்களுக்கு வஸ்த்ரம், தக்ஷிணை
ஆகியவற்றுக்கும் அன்னதானத்துக்கும் நன்கொடைகள் வரவேர்க்கப்படுகின்றன. இப்படி
நன்கொடைகள் கொடுப்பதால், கொடுப்பவர்களுக்கு பல மடங்கு நன்மைகள் பெருகும் என்பது
உண்மை. இது ஒரு பரிகாரச் செயல்தான்.
தேவி உலகத்தைக் காக்கும் தாய். அவளை சர்வ மங்கள
மாங்கல்யே என்றும் சர்வார்த்த சாதகே என்றும் அழைக்கிறோம். மிகவும் கொடிய அசுரனான
சும்பாசுரனை அவள் வதம் செய்த பிறகு அவளிடம் இந்திரன் போன்ற தேவர்கள் அக்னி தேவனின்
தலைமையில், தேவியை மலர்ந்த தாமரை புஷ்பங்களுடன் வணங்குகிறார்கள். அவர்கள் அவளை காத்யாயனி என்ற ரூபத்தில்
வணங்குகிறார்கள். சண்டிகாவின் இன்னொரு பெயர்தான் காத்யாயனி. பார்வதி தேவியே
காத்யாயன மஹரிஷியின் மகளாக ஒருமுறை அவதரித்தாள்.
த்யானம்
ஓம் பாலார்கவித்யுதிம் இம்துகிரீடாம்
தும்ககுசாம் னயனத்ரயயுக்தாம்
|
ஸ்மேரமுகீம் வரதாம் குஶபாஶ
பீதிகராம் ப்ரபஜே புவனேஶீம்
|
தேவி ப்ரபன்னார்தி ஹரே ப்ரசீத
ப்ரசீத மாதர் ஜகதோகிலஸ்ய
ப்ரசீத விஸ்வேஸ்வரி பாஹி விஸ்வம்
த்வமீஸ்வரி தேவி சரா சரஸ்ய
என்று அவளிடம் மனமுருகி பிரார்த்தனை செய்கிறார்கள்.
உன்னிடம் சரணடைவர்களின் துன்பத்தைப்
போக்குபவளே, தேவி, எங்களிடம் கருணை காட்டு. உனது அனுக்ரகங்களை எங்களுக்கு வழங்கு.
உலகத்தின் அன்னையே, கருணை காட்டு. பிரபஞ்சத்தின் தாயே, இந்த பிரபஞ்சத்தை
அழிவுகளிலிருந்து காப்பாற்று. அசையும் பொருட்களையும் அசையாப் பொருட்களையும்
ஆள்பவளே தேவியே, காப்பாற்று.
ஸ்ரீ தேவி மஹாத்மியத்தில் 11 ஆவது அத்தியாயத்தில்
உள்ள இந்த ஸ்லோகமானது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. இதையே 10,000 முறை ஜபம் செய்யவும் 1,000 முறை ஹோமம் செய்யவும் நமக்கு வழிகாட்டும் ஒரு தேவி
உபாசகர் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளார்.
இந்த ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து நீங்களும்
ஜபத்தில் பங்கு பெறலாம். ஒரு பிரார்த்தனை பலவிதமான மக்களுடன் சேர்ந்து கூட்டுப்
பிரார்த்தனையாக செய்யப்படும்போது அதன் பலன், பல மடங்கு பெருகி அதனால் அந்த
முயற்சியில் கூட இருக்கும் அனைவரும் அவர்களது குடும்பங்களும் பலன் பெறும் என்பதில்
எந்த ஐயமுமில்லை.
இந்த கூட்டுப்
பிரார்த்தனையில் கலந்து கொள்ள விரும்புவர்கள் திருமதி உஷா ராதாகிருஷ்ணன் அவர்களிடமும்
திரு நாகராஜன் அவர்களிடமும் பெயரும் பொருளும் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். திருமதி
உஷாவின் தொலை பேசி எண்: 9444047472. திரு நாகராஜனின் தொலைபேசி எண்:
9841948752
இந்த
பெறும் முயற்சிக்கு நன்கொடை அளிப்பவர்களும் திருமதி உஷாவை தொடர்பு கொள்ளலாம்.
நமது சப்தரிஷி ஜோதிட
மையத்தை சேர்ந்தவர்கள் அவர்களது நண்பர்களுக்கும் தெரிவித்து இதில் கலந்து கொள்ள
செய்யலாம்.
வணக்கத்துடன்
நாராயணன். ஸ்ரீநிவாச சர்மா